David Berlinski - மிகப் பெரிய அறிவியலாளரும் வரலாற்றாசிரியரும் ஆவார். Newton,Calculus (A Tour of the Calculus )தொடர்பான இவரது புத்தகங்கள் மிகப் பிரபலாமானவை. One,two, Three இந்த புத்தகத்தில் எண்கள் என்றால் என்ன? அதன் வரையறை என்ன? உண்மையில் கூட்டல் என்றால் என்ன? என்ற அடிப்படையான கேள்விகளுக்கு பதில் தேடியிருப்பார். வளரிளம் பருவத்தினர் கட்டாயம் இந்த புத்தகத்தை வாசிப்பது நல்லது.
Riemann hypothesis கணிதத்தில் தீர்வு காணமுடியாமல் இருக்கும் சிக்கலான கேள்விகளில் ஒன்று. அந்த, சிக்கலான பிரச்சனையை வரலாற்றின் துணை கொண்டு John Derbyshire ஆராய்ந்திருப்பார். Unknown Quantity: A Real and Imaginary History of Algebra என்ற இவரின் மற்றொரு புத்தகம் மிகவும் பிரபலமானது. Special Relativity, Quantum Mechanics, string Theory, Qunatum gravity போன்ற நவீன அறிவியல் கோட்பாட்டிற்கு வித்திட்டவர் Riemann என்று சொல்லலாம். இவர் அடித்தளமிட்ட Differential Geometry மூலமே ஐன்ஸ்டீன் General relativity கோட்பாட்டை உருவாக்கினார்.
Evolution of Physics: இயற்பியல் கோட்பாடுகளை விளக்கும் மிகச் சிறந்த புத்தகம் என்று சொல்லலாம். Albert Einstein மற்றும் Leopold Infeld என்ற இரண்டு பெரிய விஞ்ஞானிகள் இயற்பியலின் பல்வேறு கோட்பாடுகளை கேள்வி கேட்டு பதில் அளிக்கும் விதமாக புத்தகம் அமைந்துள்ளது. இயற்பியலின் பல்வேறு சிக்கலான கோட்பாடுகள் ஐன்ஸ்ட்டின் மிக எளிமையான முறையில் விளக்கமளித்திருப்பார்
Frank Wilczek - Strong Nuclear Intetaction தொடர்பான ஆய்வுக்கு நோபல் பரிசு பெற்றவர் (2004ல்). இவரின் புத்தகங்கள் இயற்பியல் மீதான வசீகரத்தை அதிகரிக்கும். தமிழ் சினிமாவில் ரஜினி படத்திற்கும் இருக்கும் அதே எதிர்பார்ப்பு, Frank Wilczek புது புத்தகம் தொடர்பான அறிவிப்புக்கும் இருக்கும் என்றால் அது மிகையாகாது.