பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கியது. முதல் வாரத்தில் ஏராளமானோர் விண்ணப்பித்தனர். அடுத்தடுத்த வாரங்களில் விண்ணப்பங்களின் எண்ணிக்கை, ஒரு நாளைக்கு இரண்டாயிரத்திற்கு மேல் இருந்தது.
2/ 3
இறுதி நாளான நேற்றுடன் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 507 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 33ஆயிரத்து 116 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், இந்த ஆண்டு 27 ஆயிரம் விண்ணப்பம் கூடியுள்ளது.
3/ 3
இதுவரை 90ஆயிரத்து 272 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். சான்றிதழ் பதிவேற்றம் செய்ய 20ம் தேதி கடைசி நாள்.