முகப்பு » புகைப்பட செய்தி » கல்வி » நவம்பர் 1 பள்ளிகள் திறப்பில் திடீர் மாற்றம்... தமிழக அரசு அறிவிப்பு

நவம்பர் 1 பள்ளிகள் திறப்பில் திடீர் மாற்றம்... தமிழக அரசு அறிவிப்பு

நர்சரி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிப்பை அடுத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வந்தனர்.

  • 15

    நவம்பர் 1 பள்ளிகள் திறப்பில் திடீர் மாற்றம்... தமிழக அரசு அறிவிப்பு

    நவம்பர் 1 முதல் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் செயல்படலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை என்று அறிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    நவம்பர் 1 பள்ளிகள் திறப்பில் திடீர் மாற்றம்... தமிழக அரசு அறிவிப்பு

    தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அரசின் வழிகாட்டுதலின்படி முறையாக நெறிமுறைகளை கடைபிடித்து பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து நவம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்காக பள்ளிகளை தயார்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    MORE
    GALLERIES

  • 35

    நவம்பர் 1 பள்ளிகள் திறப்பில் திடீர் மாற்றம்... தமிழக அரசு அறிவிப்பு

    தமிழக அரசு கடந்த கடந்த 14-ம் தேதி கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்தது. அதில் நவம்பர் 1 முதல் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள்(LKG, UKG), அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம். காப்பாளர், சமையலர் உள்பட அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அறிவித்தது.

    MORE
    GALLERIES

  • 45

    நவம்பர் 1 பள்ளிகள் திறப்பில் திடீர் மாற்றம்... தமிழக அரசு அறிவிப்பு

    நர்சரி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிப்பை அடுத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் ப்ளே ஸ்கூல், எல்.கே.ஜி., யூ.கே.ஜி, உள்ளிட்ட நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது என்றும் இது குறித்த தெளிவான அறிக்கை விரைவில் வெளியடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 55

    நவம்பர் 1 பள்ளிகள் திறப்பில் திடீர் மாற்றம்... தமிழக அரசு அறிவிப்பு

    இந்நிலையில் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பலாம் என்று ஆர்வமாக இருந்த பெற்றோர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    MORE
    GALLERIES