பிறப்புச் சான்றிதழ்; வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க சாதிச் சான்றிதழ்; வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க உரிய சான்றிதழ்; நலிவடைந்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 இலட்சத்திற்கும் கீழ் உள்ள வருமானச் சான்றிதழ்; இருப்பிடச் சான்று ஆகிய சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விடக் கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் சம்மந்தப்பட்ட பள்ளியில் 23.05.2023 அன்று குலுக்கல் நடத்தப்பட்டு சேர்க்கைக்கான குழந்தைகள் தேர்வு செய்யப்படுவர். சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் 24.05.2023 அன்று இணைய தளத்திலும் மற்றும் சம்மந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும். சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட தேர்வர்கள் 29.05.2023க்குள் சம்மந்தப்பட்ட பள்ளியில் சேர்க்க வேண்டும்.