ஒவ்வொரு வருடமும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்குவது வழக்கம். அதனைத்தொடர்ந்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வும், பிற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும். ஆனால், நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால், பொதுத் தேர்வுகள் மற்றும் இறுதித் தேர்வுகள் இம்மாதம் இறுதிவரை நடைபெறுகிறது.
இதையடுத்து 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் பள்ளிகளில் உட்கட்மைப்பை மேம்படுத்தும் பணிகள் ஜூன் இரண்டாம் வாரம் நடைபெற உள்ளது. ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்தது. ஆனால் இந்த பணிகள் முடிவடைய கால தாமதமாகும் என்பதால் ஜூன் மாதம் இறுதியில் திறக்கப்பட திட்டமிட்டுள்ளனர்.