தமிழ்நாட்டில் 6 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து, கலை அறிவியல், பொறியியல் ,வேளாண்,கால்நடை உள்ளிட்ட உயர்கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். இத்திட்டத்தின்படி 3 லட்சம் மாணவிகள் பயன் பெறுவார்கள் எனவும், குறிப்பாக கலை அறிவியல் படிப்புகளில் மட்டும் ஒரு லட்சம் மாணவிகள் பலன் பெற உள்ளதாக உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.