கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது தொடர்பாக, மத்திய அரசு பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதில், நாடு முழுவதும் பள்ளி வகுப்புகளை காலை 7 மணிக்கு தொடங்கி நண்பகலுக்குள் முடிக்கலாம் என்றும், மாணவர்களை சூரிய ஒளியில் நேரடியாக விளையாடவோ, நடமாடவோ அனுமதிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மாணவர்களுக்கு வெப்ப தாக்கம் ஏற்பட்டால் அவர்களுக்கு முதலுதவி அளிக்க, பயிற்சி பெற்றவர்கள் பள்ளிகளில் இருக்க வேண்டும். தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் தண்ணீர் பாட்டில்களை கொண்டு செல்ல அனுமதிப்பதோடு, தேர்வு மையங்களில் எளிதில் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.