முகப்பு » புகைப்பட செய்தி » கல்வி » நீட் தேர்வு வேண்டாம்.. இந்த படிப்புகள் உங்க டாக்டர் கனவை நனவாக்கும்..!

நீட் தேர்வு வேண்டாம்.. இந்த படிப்புகள் உங்க டாக்டர் கனவை நனவாக்கும்..!

MBBS படிப்பதற்கு NEET தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த தேர்வு இல்லாமல் ஒரு சில மருத்துவம் சார்ந்த படிப்புகளை நாம் படிக்கலாம்.

 • 112

  நீட் தேர்வு வேண்டாம்.. இந்த படிப்புகள் உங்க டாக்டர் கனவை நனவாக்கும்..!

  நம்மில் பெரும்பாலானவர்களுக்கு சிறு வயதில் இருந்தே, "டாக்டர் ஆக வேண்டும்" என்ற கனவு இருக்கும். ஏனென்றால், மருத்துவர்களை நாம் கடவுள்களாக பார்க்கிறோம். சுருக்கமாக சொன்னால், டாக்டர் தான் எல்லாம்... மருத்துவராக வேண்டும் என்றால், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாணவர்களின் மருத்துவ கனவு கனவாக மட்டும் உள்ளது. இன்றைய காலத்தில் மருத்துவப்படிப்பு என்பது பணக்காரர்களின் அடிப்பாக உள்ளது. ஏனென்றால், நடுத்தர குடும்பத்தை சார்ந்த மாணவர்களால் கல்லூரி மற்றும் இதர கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. நீங்கள் மருத்துவ துறையில் சாதிக்க விரும்பினால், நீட் தேர்வு எழுதாமல் சில மருத்துவம் சார்ந்த படிப்புகளை நாம் படிக்கலாம். அந்த படிப்புகள் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்.

  MORE
  GALLERIES

 • 212

  நீட் தேர்வு வேண்டாம்.. இந்த படிப்புகள் உங்க டாக்டர் கனவை நனவாக்கும்..!

  செவிலியர் (B.Sc Nursing) : மூந்த மருத்துவர்களின் வழிகாட்டுதல்கள் படி நோயாளிகளை பார்த்துக்கொள்ளும் செலியர்களுக்கான பணியில் சேர B.Sc Nursing படிப்பு உதவுகிறது. இது நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு ஆகும். இந்த படிப்பை படிக்க 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அவசியம். இளங்கலை பட்டப்படிப்புக்கு 8000 முதல் 30,000 வரை கட்டணம் செலுத்த வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 312

  நீட் தேர்வு வேண்டாம்.. இந்த படிப்புகள் உங்க டாக்டர் கனவை நனவாக்கும்..!

  பிசியோதெரபியில் இளங்கலை (BPT) : இளங்கலை பிசியோதெரபி அல்லது BPT என்பது 4½ வருட இளங்கலைப் படிப்பாகும். உடல் இயக்கம் சார்ந்த நோய்களுக்கு எளிய உடற்பயிற்சிகள் மூலம் தீர்வு காணும் ஒரு படிப்பு ஆகும். இந்த படிப்பில் சேர மாணவர்கள் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த படிப்பிற்கான பாடநெறி ஆறு மாத கட்டாய மருத்துவப் பயிற்சியின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

  MORE
  GALLERIES

 • 412

  நீட் தேர்வு வேண்டாம்.. இந்த படிப்புகள் உங்க டாக்டர் கனவை நனவாக்கும்..!

  B.Sc சைக்காலஜி : சைக்காலஜி என்பது உளவியல் சம்பந்தப்பட்ட படிப்பு ஆகும். சுருக்கமாக சொல்வதென்றால், ஒருவரை வெளிப்புற பார்வையாக அல்லாமல், அவரின் உள்ளத்தின் நினைவுகளை அறிய முயன்றிடும் முயற்சிக்கு கற்றுத்தரும் கல்வியே சைக்கலாஜி எனப்படும். ஒவ்வொருவரின் செயலுக்கும் மன ரீதியான காரணம் இருக்கும். அதை அறிந்து, அதை மாற்றுவதன் மூலம் ஒருவரின் செயலை மாற்றிட முயலும். 3 ஆண்டுகள் கற்பிக்கப்படும் இந்த படிப்பில் சேர 12-ஆம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.

  MORE
  GALLERIES

 • 512

  நீட் தேர்வு வேண்டாம்.. இந்த படிப்புகள் உங்க டாக்டர் கனவை நனவாக்கும்..!

  கால்நடை மருத்துவம் : கால்நடை மருத்துவம் (BVSc) என்பது, கால்நடை மருத்துவ இயல் விலங்குகளுக்கு ஏற்படும் நோய் பற்றியது. கால்நடை மருத்துவ அறிவியல் கல்வி ஒரு நடைமுறைத் தொழிற்கல்வியாகும். விலங்குகளின் ஆரோக்கியத்தையும் நலனையும் பேணுவதே கால்நடை மருத்துவரின் தலையாயக் கடமையாகும். 5 ஆண்டு படிப்பான இந்த படிப்பில் சேர 12-ஆம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.

  MORE
  GALLERIES

 • 612

  நீட் தேர்வு வேண்டாம்.. இந்த படிப்புகள் உங்க டாக்டர் கனவை நனவாக்கும்..!

  , மருந்தியல்மருத்துவர் (PharmD) ஆகும்.

  MORE
  GALLERIES

 • 712

  நீட் தேர்வு வேண்டாம்.. இந்த படிப்புகள் உங்க டாக்டர் கனவை நனவாக்கும்..!

  உணவியல் நிபுணர் : நோயாளிகளின், உடலின் தேவைக்கேற்ப அவர்களின் உணவுமுறைகளை ஒழுங்குபடுத்தும் நபர் உணவியல் நிபுணர் ஆவார். இந்த படிப்பு 3 ஆண்டுகள் பயிற்றுவிக்கப்படும். இத்துறை சார்ந்த படிப்பிற்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அவசியம். மருத்துவ உணவியல், சமுதாய உணவியல், நிர்வாக உணவியல் நிபுணர், ஆலோசனை உணவியல் நிபுணர் போன்ற சிறப்புத் துறைகளும் உள்ளன. ஒரு மருத்துவ உணவியல் நிபுணர் நோயாளிகளின் ஊட்டச்சத்து தேவைகளை மதிப்பிடுதல், தனிநபர் உணவுத்திட்டம் வகுத்தல், ஆலோசனை வழங்கல், நோயாளிகளின் முன்னேற்றத்தைக் கண்காணித்தல் ஆகிய பணிகளை ஆற்றுகிறார்.

  MORE
  GALLERIES

 • 812

  நீட் தேர்வு வேண்டாம்.. இந்த படிப்புகள் உங்க டாக்டர் கனவை நனவாக்கும்..!

  மருத்துவ ஆராய்ச்சியாளர் : மனிதர்கள் பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் பாதுகாப்பானதா? என சோதிக்கும் விஞ்ஞானிகள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆவர். இந்த படிப்பில் சேர பார்மசி, மருத்துவம், உயிரியல் துறையில் இளங்கலை முடித்திருக்க வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் இந்த படிப்புக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

  MORE
  GALLERIES

 • 912

  நீட் தேர்வு வேண்டாம்.. இந்த படிப்புகள் உங்க டாக்டர் கனவை நனவாக்கும்..!

  மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் : மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் (Medical Transcription), MT என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு சான்றிதழ் படிப்பு ஆகும். மருத்துவரின் சிகிச்சை குறிப்புகளை குரல் (அ) உரை செய்திகளாக மெழிபெயர்ப்பவர்களுக்கு இந்த படிப்பு அவசியமாகிறது. மருத்துவ டிரான்ஸ்கிரிப்ஷனிஸ்டுகளுக்கு பொதுவாக இரண்டாம் நிலை கல்வி தேவை. வருங்கால மருத்துவ டிரான்ஸ்கிரிப்ஷனிஸ்டுகள் மருத்துவ சொற்கள், உடற்கூறியல் மற்றும் உடலியல், இலக்கணம் மற்றும் சொல் செயலாக்க மென்பொருள் பற்றிய புரிதலைக் கொண்டிருக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 1012

  நீட் தேர்வு வேண்டாம்.. இந்த படிப்புகள் உங்க டாக்டர் கனவை நனவாக்கும்..!

  B.Sc பயோடெக்னாலஜி : பயோடெக்னாலஜியில் இளங்கலை அறிவியல் என்பது 3 ஆண்டு இளங்கலைப் படிப்பாகும். இது மூலக்கூறு மற்றும் பயன்பாட்டு உயிர் வேதியியலில் கவனம் செலுத்துகிறது. பாடநெறி பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களுடன் மாணவர்களுக்கு போதுமான அறிவு மற்றும் திறன்களை வழங்குகிறது. நீட் இல்லாமல் மருத்துவப் படிப்புகளைத் தொடரும் மாணவர்கள் பயோடெக்னாலஜியில் பிஎஸ்சி படிப்பதன் மூலம் பல்வேறு துறைகளில் பல்வேறு வாய்ப்புகளை ஆராயலாம்.

  MORE
  GALLERIES

 • 1112

  நீட் தேர்வு வேண்டாம்.. இந்த படிப்புகள் உங்க டாக்டர் கனவை நனவாக்கும்..!

  பிஎஸ்சி கார்டியோவாஸ்குலர் டெக்னாலஜி : வளர்ந்து வரும் மருத்துவ அறிவியல் துறை, கார்டியோவாஸ்குலர் டெக்னாலஜியில் பிஎஸ்சி, இருதய நோய்கள் மற்றும் எக்கோ கார்டியோகிராபி, மைக்ரோபயாலஜி, நிணநீர் திசுக்கள் போன்ற பராமரிப்பு தொடர்பான பல்வேறு தலைப்புகளில் கணினி வன்பொருள் கருவிகளுடன் அறிவை வழங்குகிறது. இந்த வல்லுநர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் மருத்துவர்களுக்கு உதவுகிறார்கள். எனவே, கார்டியோவாஸ்குலர் தொழில்நுட்பத்திற்கு நீட் தேவையா இல்லையா என்று நீங்கள் யோசித்தால், பதில் இல்லை!.

  MORE
  GALLERIES

 • 1212

  நீட் தேர்வு வேண்டாம்.. இந்த படிப்புகள் உங்க டாக்டர் கனவை நனவாக்கும்..!

  பிஎஸ்சி உயிரியல் : பிஎஸ்சி உயிரியல் என்பது 3-4 ஆண்டுகள் வரை பயிலும் இளங்கலை அறிவியல் பாடப்பிரிவில் அதிகம் விரும்பப்படுகிறது. பல்லுயிர் மற்றும் மருத்துவ நோயறிதல் முதல் சிஸ்டம்ஸ் பிசியாலஜி மற்றும் பொது சுகாதாரம் வரை, கோட்பாட்டு வகுப்புகள் மற்றும் நடைமுறை ஆய்வகங்கள் மூலம் இந்த பாடநெறி விரிவான அறிவை வழங்குகிறது.

  MORE
  GALLERIES