ஏனென்றால், அவ்வளவு வேகமாக ஃபேஷன் உலகம் மாறிக்கொண்டே இருக்கின்றன. அந்தவகையில், மாறிவரும் இந்த ட்ரெண்டிற்கு ஏற்ப எல்லோரும் அழகாக இருக்க விரும்புகிறார்கள். நம்மில் பலர் நடிகைகளின் ஆடைகளை கண்டு பல முறை வியந்திருப்போம். இதற்கு பின்னால் இருப்பது ஆடை வடிவமைப்பாளர்கள் மூளை தான். ஃபேஷன் துறை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே, ஃபேஷன் டிசைனர்களுக்கான தேவையும் சந்தையில் அதிகரித்து வருகிறது.
யுஜி மற்றும் பிஜி அளவில் பல ஃபேஷன் டிசைன் படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகள் ஃபேஷன் உலகிற்கு ஏற்ப மாணவர்களின் திறனை வளர்க்க உதவுகிறது. இதில், பேஷன் டிசைனிங், டெக்ஸ்டைல் தொழில், ஃபேஷன் மேனேஜ்மென்ட் மற்றும் பல விஷயங்களைப் பற்றி மாணவர்கள் நிறைய கற்றுக்கொள்கிறார்கள். நீங்களும் ஃபேஷன் டிசைனராக விரும்பினால், அது குறித்த படிப்புகள் மற்றும் தகுதிகள் பற்றி நாங்கள் உங்களுக்கு தெளிவாக கூறுகிறோம்.
ஃபேஷன் படிக்க சிறந்த கல்லூரிகள் எது? : NIFT பெங்களூர் - நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி, விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் - விஸ்வபாரதி, NIFT சென்னை - நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி, NIFT ஹைதராபாத் - நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி, MSU பரோடா - பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம் ஆகியவை இந்தியாவின் பிரபலமான ஃபேஷன் கல்லூரிகள் ஆகும்.