தமிழகத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளதால் பள்ளிகளுக்கு முன் கூட்டியே விடுறை அளிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கோடை வெயில் அதிகமாக இருப்பதால், விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். மாணவர்கள் நலன் சார்ந்த முடிவு எடுக்கப்பட்டு விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
வெப்பத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு சாதகமான பதில் விரைவில் வரும். கொரோனா காலத்தில் பள்ளிகள் அதிக நாட்கள் வகுப்பபுகள் நடக்காத நிலையில் பாடங்களை மாணவர்களுக்கு நடத்தி முடிக்க முடியாமல் உள்ளது. இதனால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து ஆசிரியர் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனைக்கு பின்னரே தெரியவரும்