தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வுகளில் தங்கள் செயல்திறனை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நாம் பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து தலைப்புகளையும் கவனமாக ரிவிசன் செய்ய வேண்டும். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம்.
உளவியல் ஆய்வுப்படி, மாணவர்கள் தனியாக படிப்பதை விட குழுவாக சேர்ந்து படிக்கும்போது மிகவும் வேகமாக கற்றுக்கொள்கிறார்கள். குழுவாக படிக்கையில், அவர்கள் தங்களின் நண்பர்களுடன் போட்டி போடுகிறார்கள். எனவே, மாணவர்கள் தங்களின் நண்பர்களை சந்திக்கவோ அல்லது நண்பர்களை தங்களின் வீட்டிற்கு அழைக்கவோ பெற்றோர்கள் அனுமதி வழங்க வேண்டும்.