இதனால் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் வெள்ளி நீர் வீழ்ச்சி அருகே சுமார் 3 கிமீ தூரம் வரை காத்திருந்து ஊர்ந்தபடி நகருக்குள் நுழைந்து வருகின்றன. பண்டிகை கால விடுமுறை நாட்களில் கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதியில் கூடுதலாக போக்குவரத்து காவலர்களை பணியில் அமர்த்தி போக்குவரத்து நெரிசலை துரிதமாக சரி செய்ய வேண்டும் எனவும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.