முகப்பு » புகைப்பட செய்தி » திண்டுக்கல் » வெள்ளிக்கம்பியை உருக்கியது போல் கொட்டும் புல்லாவெளி நீர்வீழ்ச்சி.. கொள்ளை அழகு..!

வெள்ளிக்கம்பியை உருக்கியது போல் கொட்டும் புல்லாவெளி நீர்வீழ்ச்சி.. கொள்ளை அழகு..!

Kodaikanal | கொடைக்கானல் கீழ்மலைக்கிராம‌ப் பகுதிகளில் பெய்த‌ தொடர் சாரல் மழையால் சீராக‌ த‌ண்ணீர் கொட்டும் புல்லாவெளி நீர்வீழ்ச்சி. செய்தியாள‌ர் : ஜாப‌ர்சாதிக், கொடைக்கான‌ல் 

 • 14

  வெள்ளிக்கம்பியை உருக்கியது போல் கொட்டும் புல்லாவெளி நீர்வீழ்ச்சி.. கொள்ளை அழகு..!

  மாவட்டம்  ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மணலூர் ஊராட்சியில் எழில் கொஞ்சும் புல்லாவெளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 24

  வெள்ளிக்கம்பியை உருக்கியது போல் கொட்டும் புல்லாவெளி நீர்வீழ்ச்சி.. கொள்ளை அழகு..!

  இந்த‌ அருவியினையும் அதனை சுற்றியுள்ள ப‌சுமை போர்த்திய‌ ம‌லை முக‌டுக‌ளையும், ஆழ‌மான‌ நீள‌மான ப‌ள்ள‌த்தாக்கினையும், வெள்ளிகம்பியை உருக்கி கொட்டிய‌து போல‌ அருவியில் கொட்டி வ‌ரும் த‌ண்ணீரை க‌ண்டு ர‌சிக்க‌ கொடைக்கான‌லில் இருந்து சுமார் 50 கி.மீ க்கு மேலாக‌ செல்ல‌ வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 34

  வெள்ளிக்கம்பியை உருக்கியது போல் கொட்டும் புல்லாவெளி நீர்வீழ்ச்சி.. கொள்ளை அழகு..!

  கடந்த சில‌ வார‌ங்க‌ளுக்கு முன்பாக‌ கீழ் மலைக்கிராம‌ப்பகுதிகளில் பெய்து வ‌ந்த‌ சார‌ல் ம‌ழையால் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் த‌ற்போது வரை தண்ணீர் சீராக‌ கொட்டுவ‌துட‌ன் ப‌ள்ள‌த்தாக்கிற்குள் விழுந்து வ‌ருகின்ற‌து.

  MORE
  GALLERIES

 • 44

  வெள்ளிக்கம்பியை உருக்கியது போல் கொட்டும் புல்லாவெளி நீர்வீழ்ச்சி.. கொள்ளை அழகு..!

  இந்த‌ அழ‌கிய‌ ர‌ம்ய‌மான‌ காட்சியினை சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் கண்டு ர‌சிக்கும் வ‌ண்ண‌ம், அருவியின் புகைப்ப‌ட‌த்துட‌ன் கூடிய‌ பெய‌ர் ப‌தாகைக‌ள் ம‌லைக்கிராம‌ சாலைக‌ளில் வைப்ப‌த‌ற்கும் குறிப்பாக‌ அருவியின் அருகில் சென்று ர‌சிப்ப‌த‌ற்கும் பாதுகாப்பு அம்ச‌ங்க‌ளை மேம்ப‌டுத்த‌வும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என இப்ப‌குதியினை சேர்ந்த‌ ம‌லைக்கிராம‌ ம‌க்க‌ள் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

  MORE
  GALLERIES