ஹோம் » போடோகல்லெரி » திண்டுக்கல் » "அழகென்ற சொல்லுக்கு முருகா" மின்னொளியில் ஜொலிக்கும் பழனி மலை.. பக்தர்கள் பரவசம்!

"அழகென்ற சொல்லுக்கு முருகா" மின்னொளியில் ஜொலிக்கும் பழனி மலை.. பக்தர்கள் பரவசம்!

Palani murugan temple | வரும் 27ஆம் தேதி பழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், கோயில் வளாகம் மின்னொளியில் ஜொலிக்கிறது. செய்தியாளர்: அங்குபாபு, பழனி.

 • 16

  "அழகென்ற சொல்லுக்கு முருகா" மின்னொளியில் ஜொலிக்கும் பழனி மலை.. பக்தர்கள் பரவசம்!

  பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மலைக்கோயில் வளாகம் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு  மின்னொளியில் ஜொலித்தது.

  MORE
  GALLERIES

 • 26

  "அழகென்ற சொல்லுக்கு முருகா" மின்னொளியில் ஜொலிக்கும் பழனி மலை.. பக்தர்கள் பரவசம்!

  பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் வரும் ஜனவரி 27ம் தேதி காலை குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.  16 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் நடைபெறும் இவ்விழாவை காண  பக்தர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 36

  "அழகென்ற சொல்லுக்கு முருகா" மின்னொளியில் ஜொலிக்கும் பழனி மலை.. பக்தர்கள் பரவசம்!

  மலைக்கோயிலில் சுமார் எட்டாயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாயிரம் பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

  MORE
  GALLERIES

 • 46

  "அழகென்ற சொல்லுக்கு முருகா" மின்னொளியில் ஜொலிக்கும் பழனி மலை.. பக்தர்கள் பரவசம்!

  ஜனவரி 26ம் தேதி பாதவிநாயகர் கோயில் முதல் படிப்பாதையில் உள்ள அனைத்து கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறுவகிறது.  மலைக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நேற்று பிற்பகல் 3 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மூலவர் சன்னதியில் அஷ்டபந்தன பணிகள் துவங்கியது.

  MORE
  GALLERIES

 • 56

  "அழகென்ற சொல்லுக்கு முருகா" மின்னொளியில் ஜொலிக்கும் பழனி மலை.. பக்தர்கள் பரவசம்!

  இதனால் குடமுழுக்கு நாளன்று வரை பக்தர்கள் மூலவரை தரிசிக்க இயலாது.  அதே போல நேற்றுடன் தங்கத்தேர் புறப்பாடும் ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மின்னொளியில் தங்க தேரும் ஜொலித்தபடி மலையை சுற்றி வந்தது.

  MORE
  GALLERIES

 • 66

  "அழகென்ற சொல்லுக்கு முருகா" மின்னொளியில் ஜொலிக்கும் பழனி மலை.. பக்தர்கள் பரவசம்!

  குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ராஜகோபுரம் முதல் தங்ககோபுரம் வரையிலும் மலைக்கோயில் பிரகாரங்களிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.  இதனால் மலைக்கோயில் இரவு நேரத்தில் தங்கக்கோபுரம் சகிதமாக தகதகவென மின்னும் வகையில் உள்ளது.

  MORE
  GALLERIES