தமிழ்புத்தாண்டு மற்றும் சனி, ஞாயிறு தொடர் விடுமுறையினை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நிலவும் இதமான காலநிலையினையும், பசுமை போர்த்திய சுற்றுலாதலங்களையும், மேகம் தவழும் மலை முகடுகளையும் கண்டு ரசிக்க சுற்றுலாப் பயணிகளின் வருகை இன்று காலை முதலே அதிகரித்து காணப்பட்டது.
குறிப்பாக உகார்த்தே நகர், கல்லறை மேடு, மூஞ்சிக்கல், லாஸ்காட்சாலை, ஏரிச்சாலை, பியர்சோழா சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலாப்பயணிகள் தொடர் வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது, இதனால் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் சுமார் 3 கிமீ தூரத்திற்கும் மேலாக ஊர்ந்தவாறு சென்றன.