இன்று காலை முதலே கொடைக்கானல் வத்தலக்குண்டு, பழனி, தாண்டிக்குடி பிரதான மலைச்சாலைகளில் அடர்ந்த மேக மூட்டங்கள் தரை இறங்கின . செய்தியாளர்- ஜாபர்சாதிக், கொடைக்கானல்
கொடைக்கானல் மலைப்பகுதியில் நவம்பர் மாதம் மத்தியிலேயே குளிர்சீசன் தொடங்கிய நிலையில் அதிகாலை மற்றும் மாலை வேளையில் கடுமையான குளிர் நிலவி வருகிறது.
2/ 9
ஒரு சில நாள் மட்டும் உறை பனி நிலவிய நிலையில் தற்போது நீர்பிடிப்பு பகுதிகளான ஏரிச்சாலை, வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார்புரம், குறிஞ்சிநகர் பகுதிகளில் நீர் பனி நிலவி வருகிறது.
3/ 9
இந்நிலையில் திடீரென காலை முதலே கொடைக்கானல் வத்தலக்குண்டு, பழனி, தாண்டிக்குடி பிரதான மலைச்சாலைகளில் அடர்ந்த மேக மூட்டங்கள் தரை இறங்கின.
4/ 9
இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையிலும் எதிரே நடந்து வந்தவர்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டது,
5/ 9
மலைச்சாலையில் வாகனங்கள் அனைத்தும் பகல் நேரத்திலேயே முகப்பு விளக்குகளை போட்டபடியே இயக்கப்பட்டன.
6/ 9
மேலும் ஒரு சிலர் வாகனங்களை இயக்காமல் பாதுகாப்பாக வழியிலேயே நிறுத்தினர். அத்துடன் பகல் நேரத்திலேயே இரவு நேரம் ஆனது போல் காட்சியளித்தது.
7/ 9
மலைப்பகுதிகளில் தொடரும் குளிர் காரணமாக அனைவரும் குளிருக்கு பாதுகாப்பான உடைகளை அணிந்தபடியே நடமாடினர்.
8/ 9
இந்த கடும் குளிர் காரணமாக பகல் நேரத்திலேயே சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.
ஒரு சில நாள் மட்டும் உறை பனி நிலவிய நிலையில் தற்போது நீர்பிடிப்பு பகுதிகளான ஏரிச்சாலை, வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார்புரம், குறிஞ்சிநகர் பகுதிகளில் நீர் பனி நிலவி வருகிறது.