இந்த பூவானது மரத்தில் பூக்கக்கூடிய அரியவகை பூ ஆகும், ஆண்டு முழுவதும் இலைகளை மட்டும் கொண்டிருக்கும் இந்த மரம், டிசம்பர் மாதத்தில் மலர் மொட்டுக்கள் உருவாகி மரத்தின் அனைத்து இலைகளையும் உதிர்க்கத்துவங்கி, டிசம்பர் மாத இறுதியிலும், ஜனவரி மாத ஆரம்பத்திலும் அனைத்து மொட்டுக்களும் ஒரே நேரத்தில் மலர்ந்து மரம் முழுவதும் ரோஸ் நிறமாக மாறி காண்பவர் கண்ணை கவரும் வண்ணத்தில் காட்சியளித்து வருகிறது.
இந்த மரத்தில் உள்ள ஹார்னமெண்டல் செர்ரி மலர் பிரையன்ட் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் மரத்தின் அருகே நின்று புகைப்படம் எடுப்பதிலும் செல்பி எடுப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர் .. மேலும் தற்பொழுது இந்த (மார்கழிப்பூ) ஹார்னமெண்டல் செர்ரி மலர்கள் மட்டும் மரம் முழுவதும் பூத்து உள்ளது அனைவரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறது.