இந்த பேரிஜம் வனப்பகுதிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகள் வனத்துறையினரின் அனுமதி பெற்று அதற்குரிய கட்டணம் செலுத்தி நாள் தோறும் குறிப்பிட்ட அளவிலான சுற்றுலாப்பயணிகள் சென்று அங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் மனதிற்கும், கண்களுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் சுற்றுலாதலங்களை கண்டு ரசித்து வருவது வாடிக்கையான ஒன்று.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் இந்த பேரிஜம் பகுதியில் நான்கு காட்டு யானைகள் குட்டியுடன் முகாமிட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பு கருதி நேற்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல தற்காலிகமாக தடைவிதித்துள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.