முகப்பு » புகைப்பட செய்தி » திண்டுக்கல் » திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா.. பூச்சொரிதலுடன் நாளை தொடங்குகிறது..

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா.. பூச்சொரிதலுடன் நாளை தொடங்குகிறது..

Dindigul news : திண்டுக்கல் நகரின் அடையாளமாக விளங்கும் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா பூச்சொரிதலுடன் நாளை(17.02.2023) தொடங்குகிறது. நாளை முதல் மார்ச் 7ம் நாள் வரை திருவிழா நடைபெற உள்ளது. 

  • Local18
  • 19

    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா.. பூச்சொரிதலுடன் நாளை தொடங்குகிறது..

    திண்டுக்கலில் அமைந்துள்ள மலை, திண்டு போன்று காட்சியளிப்பதால், என பெயர் வழங்கப்படுகிறது. புராண காலத்தில் பத்மகிரி, திண்டீச்சுரம், நெல்லிவனம் ஆகிய திருப்பெயர்களும் இந்நகருக்கு உண்டு. சேர, சோழ, பாண்டிய நாடுகளின் நடுப்பகுதியில் அமைந்த நகரமாக இது அமைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 29

    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா.. பூச்சொரிதலுடன் நாளை தொடங்குகிறது..

    ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டம், இந்நகரை பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையாக கூறுகிறது. 300 ஆண்டுகளைக் கடந்த இந்த கோயில் திப்புசுல்தான் காலத்தில் கட்டப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 39

    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா.. பூச்சொரிதலுடன் நாளை தொடங்குகிறது..

    ஆனால் மதுரை பாண்டிய மன்னர் முதலாம் சடையவர்மன் குலசேகரப் பாண்டியர் காலத்தில் இங்கு வழிபடப்பட்ட ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலே சிதைந்து போய், பிறகு மாரியம்மன் கோயிலானதாகவும் கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 49

    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா.. பூச்சொரிதலுடன் நாளை தொடங்குகிறது..

    எப்படியோ இருக்கட்டும் திண்டுக்கல்லின் மகாராணியாக, சாம்ராஜ்ஜிய துர்கையாக அருள்கிறாள் இந்த அம்மன். விநாயகர் சந்நிதி, மதுரை வீரன் சந்நிதி, கருப்பண்ண சாமி சந்நிதி, முனியசாமி சந்நிதி, நவகிரக மூர்த்தியர் சந்நிதிகளும் இந்த கோவிலில் உள்ளன.

    MORE
    GALLERIES

  • 59

    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா.. பூச்சொரிதலுடன் நாளை தொடங்குகிறது..

    அம்மனின் பின்புறத்தில் துவாரம் ஒன்று காணப்படுகிறது. இது அம்மனுக்கே உரிய ஒரு தனிச்சிறப்பாகும். சன்னிதியின் உள்புறத்தில் நுழைவு வாயிலில் கம்பத்தடி உள்ளது. இக்கம்பத்தடி தாமிரத்தால் கலந்து செய்யப் பெற்றுள்ளது.

    MORE
    GALLERIES

  • 69

    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா.. பூச்சொரிதலுடன் நாளை தொடங்குகிறது..

    மக்கள் நோய் நொடிகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக இக்கம்பத்திற்கு மஞ்சளும், உப்பும் போடுகின்றனர். ஆடி மாத வெள்ளி, செவ்வாய், ஞாயிறு பூஜைகளும், மாசி மாத விழாவும் இங்கு வெகு பிரசித்தம். மண்டகப்படி விழா, பூக்குழி விழா, தசாவதார விழா, ஊஞ்சல் உற்சவம், தெப்போற்சவம் போன்ற வைபவங்கள் மாசித்திருவிழாவின் போதும் இங்கு நடைபெறும்.

    MORE
    GALLERIES

  • 79

    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா.. பூச்சொரிதலுடன் நாளை தொடங்குகிறது..

    தெப்ப திருவிழாவின்போது மாரியம்மன் சயனகோலத்தில் காட்சியளிப்பது இந்தக் கோயிலில் மட்டும்தான் என்பதும் சிறப்பு.
    முளைப்பாரி, அங்கப்பிரதட்சணம், தொட்டில் கட்டுவது, உப்பு - மிளகுக் கொட்டுவது, மலர் பந்து சாத்துதல், தீச்சட்டி ஏந்துவது, பூக்குழி இறங்குவது, கரும்புத் தொட்டில் சுமப்பது, மாவிளக்கு ஏற்றுதல் என இங்கு ஒவ்வொரு பிரார்த்தனைக்கும் நேர்த்திக் கடன்கள் அநேகம்.

    MORE
    GALLERIES

  • 89

    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா.. பூச்சொரிதலுடன் நாளை தொடங்குகிறது..

    குறிப்பாக அம்மை நோய் தாக்கியவர்பகளுக்கு இந்த கோவிலின் தீர்த்தம் தான் அருமருந்து. சமய பேதமில்லாமல் இந்ததீர்த்தத்தை மக்கள் அருந்துவதே அதற்கு சான்று. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 9, 10, 11 ஆகிய நாட்களிலும் அக்டோபர் மாதம் 2, 3, 4 ஆகிய நாட்களிலும் காலை 6.20 மணி முதல் 6.40 மணி வரை சூரியனின் செங்கதிர்கள் மாரியம்மனின் திருமுடிமீது பட்டு கீழிறங்கி திருமுகத்தில் பணிவது சிலிர்க்க வைக்கும் திருக்காட்சிபுரிவார்.

    MORE
    GALLERIES

  • 99

    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா.. பூச்சொரிதலுடன் நாளை தொடங்குகிறது..

    இதனை கிறிஸ்தவர், இஸ்லாமியர், இந்துக்கள் என 3 மத மக்களும் மகிழ்ந்து கொண்டாடுவர். இந்த கோவிலின் ஆண்டு மாசித்திருவிழா பூச்சொரிதலுடன் நாளை(17.02.2023) வெள்ளிக்கிழமை தொடங்கி அடுத்த மாதம் 7.3.2023 செவ்வாய்க் கிழமை தெப்ப உற்சவத்துடன் முடிவடைய உள்ளது. மாவட்ட நிர்வாகமும், கோவில் நிர்வாகமும் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

    MORE
    GALLERIES