தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது மிதமான நீர்வரத்து உள்ளது.
2/ 9
நேற்று வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக இருந்த தண்ணீர் வரத்து மேலும் குறைந்து இன்று காலை 8000 கன அடியாக உள்ளது.
3/ 9
ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, சினியருவி, மெயின் அருவி, உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
4/ 9
மேலும் மிதமான நீர்வரத்து உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் ஏதுவாக உள்ளது.
5/ 9
இதனையடுத்து இன்று விடுமுறை நாள் என்பதால் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்தனர்.
6/ 9
ஒகேனக்கலில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று மழை பெய்யாத நிலையில் இன்று கடுமையான குளிர் நிலவி வருவதால் ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக காணப்படுகிறது.
7/ 9
இந்த குளிரையும் பெரிதும் பொருட்படுத்த வந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து, பரிசல் பயணத்தை மேற்கொண்டு சுவையான மீன் சமையல் சமைத்து உண்டு மகிழ்ந்தனர்.
8/ 9
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் களை கட்டியது.
9/ 9
இதனால் ஒகேனக்கல் சுற்றுலாவை தொழிலை நம்பியுள்ள பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், சமையலறை வியாபாரிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.