தொடா் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படும்.இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் பகுதிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளில் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்காக மாமரத்துக்கடவு பரிசல் துறையில் இருந்து தொம்பச்சிக்கல் வழியாக பெரிய பாணி, ஐந்தருவி வழியாக மணல்மேடு வரை பரிசல் பயணம் மேற்கொண்டனா்.
விடுமுறை நாட்களில் ஒகேனக்கல்லில் தடை செய்யப்பட்ட மற்றும் ஆபத்தான இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கூடுதலாக போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உயிரிழப்பு நிகழ்வதை தடுக்க வேண்டும் எனவும், ஆபத்தான இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் பரிசல் ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளதால் வார விடுமுறையான இன்று ஒகேனக்கல் அருவி பகுதிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை சற்று குறைந்தது. வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி, முதலைப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் குளித்தனா். மேலும் காவிரி ஆற்றில் குடும்பத்தினருடன் உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டனா்.