தருமபுரி மாவட்டம் அரூரில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள், ஆண்டுதோறும் தை மாதத்தில் தங்களது தொழில், வியாபாரம் நலமுடன் இருக்க தேவாதியம்மனுக்கு கிடா வெட்டி படையலிட்டு வழிபடுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டும் தேவாதியம்மன் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.