முகப்பு » புகைப்பட செய்தி » தர்மபுரி » மூலிகை தோசை... காடை முட்டை‌ உணவு வகைகள்.. தருமபுரி மரபுச் சந்தையில் குவியும் பொதுமக்கள்

மூலிகை தோசை... காடை முட்டை‌ உணவு வகைகள்.. தருமபுரி மரபுச் சந்தையில் குவியும் பொதுமக்கள்

ரசாயன பொருட்கள் கலக்காத உணவுகளை பொதுமக்கள் தேடுவதால் இந்த மரபுச் சந்தைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. செய்தியாளர்: சுகுமார் (தருமபுரி)

  • 16

    மூலிகை தோசை... காடை முட்டை‌ உணவு வகைகள்.. தருமபுரி மரபுச் சந்தையில் குவியும் பொதுமக்கள்

    தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள இயற்கை விவசாயிகள் ஒன்றிணைந்து கடந்த நான்கு ஆண்டுகளாக தருமபுரி பாரதிபுரத்தில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மரபு சந்தை கூடுகிறது.

    MORE
    GALLERIES

  • 26

    மூலிகை தோசை... காடை முட்டை‌ உணவு வகைகள்.. தருமபுரி மரபுச் சந்தையில் குவியும் பொதுமக்கள்

    இந்த மரபு சந்தையில் ரசாயனம் கலக்காத, இயற்கை முறையில் பயிரிடப்படுகின்ற காய்கறிகள், பழங்கள், கீரைகள், விதைகள், தேங்காய் பூ , பதநீர், சிவப்பு அகத்தி பூ, இயற்கை உணவு வகைகள், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன.

    MORE
    GALLERIES

  • 36

    மூலிகை தோசை... காடை முட்டை‌ உணவு வகைகள்.. தருமபுரி மரபுச் சந்தையில் குவியும் பொதுமக்கள்

    இயற்கைச் சூழலுக்கு பாதிப்பில்லாமல், உடலுக்கு கேடு விளைவிக்காமல் இயற்கையான பொருட்கள் சற்று கூடுதல் விலைக்கு கிடைப்பதால், இந்த மரபு சந்தைக்கு தருமபுரி பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடத்தில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.

    MORE
    GALLERIES

  • 46

    மூலிகை தோசை... காடை முட்டை‌ உணவு வகைகள்.. தருமபுரி மரபுச் சந்தையில் குவியும் பொதுமக்கள்

    இன்றைய மரபு சந்தைக்கு இயற்கை வகையான காய்கறிகள் உணவு வகைகளை வாங்க பொதுமக்களும் குவிந்தனர்.தங்களுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் சிறுதானியங்கள், நாட்டு மாட்டு நெய், ஆர்கானிக் காய்கறி கீரை வகைகள், சத்துமாவு உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர்.

    MORE
    GALLERIES

  • 56

    மூலிகை தோசை... காடை முட்டை‌ உணவு வகைகள்.. தருமபுரி மரபுச் சந்தையில் குவியும் பொதுமக்கள்

    மரபு சந்தையிலேயே இறைச்சி வகையான நாட்டுக்கோழி, ஆட்டுக்கறி, மீன், முட்டை, காடை முட்டை பணியாரம், நெய் கிச்சடி அரிசி பணியாரம் என உண்டு மகிழ்ந்தனர். ஒன்பது வகையான பாரம்பரியம் மிக்க நவதானிய மூலிகை பருப்பு தோசை, கருப்புகவுனி, மாப்பிள்ளை சம்பா கருங்குடுவை உள்ளிட்ட உயர்ரக அரிசி தோசை,பீட்ருட் கேரட் தோசை, முடக்கத்தான் வெண்பூசணி கோவையிலை கலந்த மூலிகை தோசைகள், காடை முட்டை உணவுகளை காலை 8 மணி முதலே குடும்பத்தோடு வந்து ருசித்தனர்.

    MORE
    GALLERIES

  • 66

    மூலிகை தோசை... காடை முட்டை‌ உணவு வகைகள்.. தருமபுரி மரபுச் சந்தையில் குவியும் பொதுமக்கள்

    ரசாயன பொருட்கள் கலக்காத உணவுகளை பொதுமக்கள் தேடுவதால் இந்த மரபுச் சந்தைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இன்றைய மரபு சந்தையில் பொதுமக்களின் வருகை சற்று அதிகரித்திருந்தது. இன்றைய காலகட்டத்தில் ரசாயன பொருட்கள் இல்லாத உணவு கிடைப்பது என்பது எட்டாக்கனியாக இருந்து வரும் நிலையில் தர்மபுரி பாரதிபுரத்தில் உள்ள மரபுச் சந்தையில் பொதுமக்களுக்கு ஆரோக்கிய உணவை வழங்கி வருவது பொதுமக்களிடத்தில் பெரும் வரவேற்பை அளித்துள்ளது.

    MORE
    GALLERIES