பிளாஸ்டிக் ஒழிப்பு, மரங்களை நடுதல், இயற்கை விவசாய முறைகள் என்று பல்வேறு வழிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பலரும் முயன்று வரும் நிலையில் தருமபுரி மாவட்டம் எர்ரபையனஅள்ளி ஊராட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சிலம்பரசன் 42 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உன்னத முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து பேசிய ஊராட்சி மன்ற தலைவர் சிலம்பரசன் "தங்கள் ஊராட்சியில் இந்த மரங்களால் கிடைக்கும் வருவாய் மூலம் அடிப்படை தேவைகளான சாலை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தங்கள் ஊராட்சி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு முதன்மை சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.