முகப்பு » புகைப்பட செய்தி » கடலூர் » நாடு கடந்து மலர்ந்த காதல்... சீனப் பெண்ணை தமிழ் முறைப்படி மணந்த கடலூர் இளைஞர்

நாடு கடந்து மலர்ந்த காதல்... சீனப் பெண்ணை தமிழ் முறைப்படி மணந்த கடலூர் இளைஞர்

கடலூரைச் சேர்ந்த இளைஞர் சீனப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

  • 110

    நாடு கடந்து மலர்ந்த காதல்... சீனப் பெண்ணை தமிழ் முறைப்படி மணந்த கடலூர் இளைஞர்

    கடலூரைச் சேர்ந்த இளைஞருக்கும் சீனாவைச் சேர்ந்த பெண்ணுக்கும் இந்தியச் கலாச்சாரத்துடனும் தமிழ் முறைப்படியும் திருமணம் நடைபெற்றது.

    MORE
    GALLERIES

  • 210

    நாடு கடந்து மலர்ந்த காதல்... சீனப் பெண்ணை தமிழ் முறைப்படி மணந்த கடலூர் இளைஞர்

    கடலூர் மஞ்சக்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவருக்கும் சீனா நாட்டை யீஜியோ சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று காலை கடலூர் முதுநகரில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சம்மதத்துடன் இந்திய கலாச்சாரத்துடன் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.

    MORE
    GALLERIES

  • 310

    நாடு கடந்து மலர்ந்த காதல்... சீனப் பெண்ணை தமிழ் முறைப்படி மணந்த கடலூர் இளைஞர்

    இதனைத் தொடர்ந்து மணமகன் பாலச்சந்தர், மணமகளான சீனா நாட்டைச் சேர்ந்த யீஜியோவுக்கும் தமிழ் முறைப்படி பட்டு வேஷ்டி சட்டை மற்றும் பட்டு புடவை தங்க அணிகலன் அணிந்து தமிழ் முறைப்படி குண்டம் அமைத்து மந்திரம் முழங்க மங்கள இசையுடன் திருமாங்கல்யம் கட்டி திருமணம் நடைபெற்றது.

    MORE
    GALLERIES

  • 410

    நாடு கடந்து மலர்ந்த காதல்... சீனப் பெண்ணை தமிழ் முறைப்படி மணந்த கடலூர் இளைஞர்

    சீனப் பெண் யீஜியோ ஒவ்வொரு தமிழ் சடங்குகளையும் ஆர்வமுடன் மணமகிழ்ச்சியுடன் செய்தார்.

    MORE
    GALLERIES

  • 510

    நாடு கடந்து மலர்ந்த காதல்... சீனப் பெண்ணை தமிழ் முறைப்படி மணந்த கடலூர் இளைஞர்

    அப்போது சீனா நாட்டைச் சேர்ந்த யீஜியோ பெண்ணின் உறவினர்கள், மணமகனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆனந்தமாக புகைப்படத்தை எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    MORE
    GALLERIES

  • 610

    நாடு கடந்து மலர்ந்த காதல்... சீனப் பெண்ணை தமிழ் முறைப்படி மணந்த கடலூர் இளைஞர்

    மேலும் சீனப் பெண் யீஜியோ, மணமகனின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்களை அரவணைத்து அன்புடன் பேசி மகிழ்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    MORE
    GALLERIES

  • 710

    நாடு கடந்து மலர்ந்த காதல்... சீனப் பெண்ணை தமிழ் முறைப்படி மணந்த கடலூர் இளைஞர்

    இதுகுறித்து பேசிய மணமகன் பாலச்சந்தர், ‘சீனா மற்றும் பாங்காகில் தொழில் முனைவராக இருந்து வருகின்றேன். அப்போது நானும் சீனா நாட்டை சேர்ந்த யீஜியோ பெண்ணிற்கும் சமூக வலைத்தளங்கள் (ஆப்) மூலமாக தொடர்ந்து பேசி வந்தோம். இந்த தொடர்பு நாளடைவில் நல்ல நட்பாக மாறி பின்னர் காதலாக மாறியது.

    MORE
    GALLERIES

  • 810

    நாடு கடந்து மலர்ந்த காதல்... சீனப் பெண்ணை தமிழ் முறைப்படி மணந்த கடலூர் இளைஞர்

    இதனைத் தொடர்ந்து இரண்டு பேரும் மனதளவில் காதல் ஏற்பட்டு இந்திய கலாச்சாரம் மற்றும் தமிழ் முறைப்படி பெற்றோர்கள் சம்மதத்துடன் முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எண்ணியதால் இன்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில்  திருமணம் நடைபெற்றது.

    MORE
    GALLERIES

  • 910

    நாடு கடந்து மலர்ந்த காதல்... சீனப் பெண்ணை தமிழ் முறைப்படி மணந்த கடலூர் இளைஞர்

    திருமணத்திற்கு முன்பு இருந்த காதலுடன் எங்களது வாழ்க்கை பயணத்தை ஆனந்தமாக கடப்போம் என நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

    MORE
    GALLERIES

  • 1010

    நாடு கடந்து மலர்ந்த காதல்... சீனப் பெண்ணை தமிழ் முறைப்படி மணந்த கடலூர் இளைஞர்

    இதனைத் தொடர்ந்து பாலச்சந்தர் சகோதரர் பாலமுருகன் என்பவருக்கும் இவர்களது திருமணத்திற்கு பிறகு திருமணம் நடைபெற்றது.

    MORE
    GALLERIES