ஹோம் » போடோகல்லெரி » கடலூர் » களைகட்டிய தென்பெண்ணை ஆற்று திருவிழா.. ஒரே இடத்தில் சங்கமித்த 50க்கும் மேற்பட்ட தெய்வங்கள்

களைகட்டிய தென்பெண்ணை ஆற்று திருவிழா.. ஒரே இடத்தில் சங்கமித்த 50க்கும் மேற்பட்ட தெய்வங்கள்

cuddalore thiruvizha | 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த திருவிழா நடைபெறுவதால் மக்கள் மகிழ்சசியோடு வருகை தந்தை சாமி தரிசனம் செய்தனர். செய்தியாளர்: பிரேமானந்த், கடலூர்.

 • 16

  களைகட்டிய தென்பெண்ணை ஆற்று திருவிழா.. ஒரே இடத்தில் சங்கமித்த 50க்கும் மேற்பட்ட தெய்வங்கள்

  தென்பெண்ணை ஆற்று திருவிழா 3 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்றது. பொங்கல் பண்டிகையையொட்டி 5ம் நாள் ஆற்று திருவிழா நடைபெறுவது வழக்கம். 3 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கடலூரில்  உள்ள தெண்பெண்ணை ஆற்றில் திருவிழா களைகட்டியது.

  MORE
  GALLERIES

 • 26

  களைகட்டிய தென்பெண்ணை ஆற்று திருவிழா.. ஒரே இடத்தில் சங்கமித்த 50க்கும் மேற்பட்ட தெய்வங்கள்

  இதில், கடலூர் வண்டிபாளையம், கடலூர் முதுநகர், பாதிக்குப்பம், தேவனாம்பட்டினம், குண்டு உப்பலவாடி, உதாழங்குடா, உச்சிமேடு, பச்சாங்குப்பம் மற்றும் புதுச்சேரி மாநில கிராம பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு பெண்ணையாற்றுக்கு கொண்டுவரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 36

  களைகட்டிய தென்பெண்ணை ஆற்று திருவிழா.. ஒரே இடத்தில் சங்கமித்த 50க்கும் மேற்பட்ட தெய்வங்கள்

  கடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆற்று திருவிழாவில் கலந்துகொண்டு ஆற்றில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி ஒரே இடத்தில் நிறுத்திவைக்கப்படுள்ள  சுவாமிகளை வழிப்பட்டனர்.

  MORE
  GALLERIES

 • 46

  களைகட்டிய தென்பெண்ணை ஆற்று திருவிழா.. ஒரே இடத்தில் சங்கமித்த 50க்கும் மேற்பட்ட தெய்வங்கள்

  சிறுவர்கள், சிறுமிகள் ராட்டினம் உட்பட விளையாட்டு சாதனங்களில் விளையாடி மகிழ்ந்தனர். பொதுமக்கள் அங்கு விற்பனை செய்யப்பட்ட வீட்டு உபயோகப்பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், உணவுப் பொருட்களை ஆர்வமாக வாங்கிச் சென்றனர்.

  MORE
  GALLERIES

 • 56

  களைகட்டிய தென்பெண்ணை ஆற்று திருவிழா.. ஒரே இடத்தில் சங்கமித்த 50க்கும் மேற்பட்ட தெய்வங்கள்

  அதிக மக்கள் கூடியதால் மக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் 200க்கும் மேற்பபட்ட போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  MORE
  GALLERIES

 • 66

  களைகட்டிய தென்பெண்ணை ஆற்று திருவிழா.. ஒரே இடத்தில் சங்கமித்த 50க்கும் மேற்பட்ட தெய்வங்கள்

  கொரோனா காலத்திற்ககு 3 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்த திருவிழா இந்த ஆண்டு நடைபெறுவதால் மக்கள் மகிழ்சசியோடு வருகை தந்தை சாமி தரிசனம் செய்து வழிப்படனர்.

  MORE
  GALLERIES