சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆனி திருமஞ்சன தரிசனம் நாளை மதியம் நடைபெற உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன தரிசன விழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.