உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36 லட்சத்தை எட்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தையும், குணமடைந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தையும் நெருங்கியுள்ளது. அமெரிக்காவில் பாதிப்பு 12 லட்சத்தை எட்டியுள்ள நிலையில், உயிரிழப்பு 69 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஸ்பெயினில் 2 லட்சத்து 47ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, ஒரு லட்சத்து 48ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இத்தாலியில் உயிரிழப்பு 29 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. பிரேசிலில் பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ள நிலையில், ஈரானில் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.