முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » உலகளவில் 2 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு - எந்தெந்த நாடுகளில் பாதிப்பு அதிகம்

உலகளவில் 2 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு - எந்தெந்த நாடுகளில் பாதிப்பு அதிகம்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடியை கடந்துள்ளது.

 • 110

  உலகளவில் 2 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு - எந்தெந்த நாடுகளில் பாதிப்பு அதிகம்

  சீனாவின் ஊஹான் நகரில் முதல்முதலாக கடந்த ஆண்டு, டிசம்பர் 31-ஆம் தேதி முதல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 210

  உலகளவில் 2 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு - எந்தெந்த நாடுகளில் பாதிப்பு அதிகம்

  நடப்பாண்டு மார்ச் 6-ஆம் தேதி 67-ஆவது நாளில் பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது. அசுர வேகத்தில் பரவிய கொரோனா 94 நாட்களில் 10 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்தது.

  MORE
  GALLERIES

 • 310

  உலகளவில் 2 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு - எந்தெந்த நாடுகளில் பாதிப்பு அதிகம்

  மே 20-ல் 142 நாட்களை கடந்த கொரோனா 50 லட்சம் பாதிப்புகளை எட்டியது. ஜூன் 27-ல் பாதிப்பு ஒரு கோடியை எட்டிய போது, 180 நாட்கள் ஆகியிருந்தது.

  MORE
  GALLERIES

 • 410

  உலகளவில் 2 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு - எந்தெந்த நாடுகளில் பாதிப்பு அதிகம்

  தற்போது 2 கோடியை கடந்துள்ள கொரோனா பாதிப்பு, அதற்கு எடுத்துக்கொண்ட காலம் 224 நாட்கள். இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டுமே 51 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 510

  உலகளவில் 2 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு - எந்தெந்த நாடுகளில் பாதிப்பு அதிகம்

  பிரேசிலில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகளை கொண்ட இந்தியாவில், பாதிப்பு விகிதம் 11.07 சதவீதமாக உள்ளது.

  MORE
  GALLERIES

 • 610

  உலகளவில் 2 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு - எந்தெந்த நாடுகளில் பாதிப்பு அதிகம்

  அமெரிக்கா, பிரேசில், இந்தியாவில் மொத்தமாக 50 விழுக்காட்டிற்கும் அதிகமான பாதிப்புகள் உள்ளன. இந்நிலையில், உலகளவில் கொரோனாவால் 7,34,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 710

  உலகளவில் 2 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு - எந்தெந்த நாடுகளில் பாதிப்பு அதிகம்

  இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 1,65,000 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன. பிரேசிலில் ஒரு லட்சத்திற்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 810

  உலகளவில் 2 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு - எந்தெந்த நாடுகளில் பாதிப்பு அதிகம்

  மெக்சிகோவில் 52,000 பிரிட்டனில் 46,000 பேர் உயிரிழந்துள்ளனர். 5-வது இடத்தில் உள்ள இந்தியாவில் 44,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 910

  உலகளவில் 2 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு - எந்தெந்த நாடுகளில் பாதிப்பு அதிகம்

  உலகளவில் இறப்பு விகிதம் 5.42 சதவீதமாக உள்ள நிலையில், அமெரிக்காவில் 3.18ஆகவும்,  பிரேசிலில் 3.33 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2 சதவீதமாக உள்ளது.

  MORE
  GALLERIES

 • 1010

  உலகளவில் 2 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு - எந்தெந்த நாடுகளில் பாதிப்பு அதிகம்

  கொரோனாவை கட்டுப்படுத்திய நியூசிலாந்து நாட்டில், கடந்த 100 நாட்களாக ஒரு பாதிப்பு கூட கண்டறியப்படவில்லை.

  MORE
  GALLERIES