உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 17 லட்சத்தையும், உயிரிழப்பு 5,40,000ஐயும் கடந்துள்ளது. அமெரிக்காவில் பாதிப்பு 30,00,000யும், பிரேசிலில் 16,00000 தாண்டியுள்ளது. ரஷ்யாவில் 6,87,000 பாதிப்புகளும் உள்ளது. உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 66,00,000ஐ கடந்துள்ளது. பெருவில் பாதிப்பு எண்ணிக்கை 3,00,000ஐ கடந்தது. இந்தியா, ஸ்பெயின், சிலி, பிரிட்டன், மெக்சிகோ, இத்தாலி ஆகிய நாடுகள் அதிகம் பாதிப்பை சந்தித்த நாடுகள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.