பொது நலனில் அதிக ஆர்வம் உடைய இவர் புயல், மழை காலங்களில் தன்னால் ஆன உதவியை செய்து வருகிறார். அதே போல இந்த கொரோனா ஊரடங்கு காலத்திலும் அன்றாடம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை டீ தயாரித்து காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மனநலம் பாதித்தவர்கள், வெளியூர் செல்ல முடியாமல் தவிப்பவர்கள், சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு தினமும் வழங்கி வருகிறார்.