ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் கடல் மீன்கள் வரத்து பெருமளவு குறைந்தது. அதனால் இளையான்குடி பெரிய கண்மாய்யில் மீன் பிடிக்க அருகே உள்ள கிராம மக்கள் அனைவரும் வந்து மீன்களை அள்ளி சென்றனர்.
2/ 7
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பெரிய கண்மாயில் கடந்தாண்டு பெய்த வடகிழக்கு பருவ மழை காரணமாக கண்மாயில் தண்ணீர் தேங்கியது.
3/ 7
தொடர்மழை இல்லாததால் கண்மாயில் தண்ணீர் வற்ற தொடங்கியது, இதனையடுத்து நேற்று கண்மாயில் மீன் பிடிக்க கிராம மக்கள் களத்தில் இறங்கினர்.
4/ 7
இடையவலசை, இந்திரா நகர், கரைக்குடி, கொங்கன்பட்டி, அதிகரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கரைவலை, கை வலை, கொசுவலை, வேட்டி, சேலை உள்ளிட்டவற்றை வைத்து மீன் பிடித்தனர்.
5/ 7
அதில் கெழுத்தி, கெண்டை, கட்லா உள்ளிட்ட பல்வேறு வகை மீன்களை பிடித்து சென்றனர்.
6/ 7
ஏராளமான மீன்கள் கிடைத்தால் கிராமமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
7/ 7
இந்த மீன் பிடிக்கும் நிகழ்வில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரும் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.