இவர்களுக்கு மூக்கின் வழியாக சோதனை நடத்தப்பட்டதில்தான் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மூக்கில் கொரோனா வைரஸின் மரபணு உற்பத்தி மேல் சுவாச பாதையில் படிந்திருப்பதைக் கண்டுள்ளனர். AFP வெளியிட்ட செய்திக் குறிப்பில் வைரஸ் மரபணுக்கள் என்பது விரைவில், பலரையும் தாக்கும் ஆபத்துக் கொண்டது என ஆய்வு வெளியிட்டது.
வைரஸ் பரப்புவதில் குழந்தைகளுக்கு அதிக பங்களிப்பு இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் இந்த சமீபத்திய ஆய்வானது அப்படி வைரஸ் தாக்கினால் அவர்கள்தான் பரப்புவதில் திறன் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். ஏனெனில் அவர்களின் மேல் சுவாசப் பாதையிலேயே இந்த வைரஸானது தங்கி மரபணு மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன. இது பரவினால் அதீத தீவிர அறிகுறிகளுடன் தாக்கும் ஆபத்தையும் கொண்டது என எச்சரிக்கிறது.