ஊரடங்கினால் வெறிச்சோடிய கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா - பூத்துக்குலுங்கும் இரண்டு கோடி மலர்கள்
பூங்காவை தோட்டக்கலைத்துறையினர், பூங்கா ஊழியர்கள் தயார் செய்து, அதில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மலர்கள் பூக்கும் வகையில் பணிகளை மேற்கொள்வார்கள். படங்கள் : ஜாபர்சாதிக்
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மலர்களை காண்பதற்கும், ரசிப்பதற்கும் ஆளில்லாமல் ஊரடங்கினால் வெறிச்சோடி காணப்படுகின்றது.
2/ 29
மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த போதிலும், கோடை சீசன் காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம்.
3/ 29
இங்கு நிலவும் காலநிலையினை ரசிப்பதற்கும், குளுமையை அனுபவிப்பதற்கும் பச்சைப்பசேல் என பச்சைக்கம்பளம் போர்த்தியது போல் காட்சியளிக்கும் மலை முகடுகளை காணவும் தரையிரங்கி வரவேற்கும் மேகமூட்டத்தில் உலாவவும் , சுற்றுலாப்பயணிகள் குவிவது வாடிக்கையான ஒன்று.
4/ 29
இந்த சீசன் காலங்களில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு ஆண்டு தோறும் மே மாதத்தில், மலர் கண்காட்சி, நாய்கள் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு வகையிலான கண்காட்சிகளும் நடத்தப்படுவதுண்டு,
5/ 29
இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுப்பது வழக்கம்.
6/ 29
குறிப்பாக,பிரையண்ட் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சியை காணவே பல லட்சம் சுற்றுலா பயணிகள் குவிவதும் தனிச்சிறப்பு, இதற்காக பூங்காவை தோட்டக்கலைத்துறையினர், பூங்கா ஊழியர்கள் தயார் செய்து, அதில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மலர்கள் பூக்கும் வகையில் பணிகளை மேற்கொள்வார்கள்.
7/ 29
இந்நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே கொரோனா முன்னேச்சரிக்கை நடவடிக்கைகாக அனைத்து சுற்றுலாதலங்களும் மூடப்பட்டு அனைத்து சுற்றுலா இடங்களும் வெறிச்சோடியே காட்சியளிப்பதும் குறிப்பிடத்தக்கது,
8/ 29
இந்நிலையில் இந்த ஆண்டும் மே மாதம் நடக்கும் மலர் கண்காட்சிக்காக பிரையண்ட் பூங்காவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் நாற்று நடவு பணிகள் மூன்று கட்டமாக துவக்கப்பட்டது.
9/ 29
தற்போது பூங்காவில் உள்ள பல லட்சம் மலர் செடிகளில் பல வகையான வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றது.
10/ 29
இன்கா மேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, பேன்சி, டயான்தஸ், பிகோனியா, டேலியா, பால்சம், ரெனன்குலஸ், கேலண்டுலா, கிளாடியோலஸ், லில்லியம், சூரியகாந்தி, சப்னேரியா என பல வகையான மலர்கள் பூத்துள்ளது.
11/ 29
5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகள் பூக்களுடன் கற்றாழை செடிகளுடனும் கண்ணாடி மாளிகை மாடத்தினை அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது போல் காட்சியளிக்கின்றது.
12/ 29
அதேபோல், பச்சை கம்பளம் போர்த்தியது போல், பூங்காவில் உள்ள அனைத்து புல் மைதானங்களும் ஊழியர்களால் பராமரிக்கப்பட்டு கண்ணைக்கவரும் வகையில் காட்சியளிக்கிறது.
13/ 29
ஆனால், ஊரடங்கு வரும் 17ம் தேதி வரை அமலில் உள்ள நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
14/ 29
எனினும், வழக்கம் போல், அனைத்து பராமரிப்பு பணிகளையும் தோட்டக்கலைத்துறையினர் மற்றும் பூங்கா ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.
15/ 29
வெயிலில் மலர்கள் வாடாமல் இருக்க நாள் தோறும் தண்ணீர் பாய்ச்சும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
16/ 29
இம்மாதம் 17ம் தேதியுடன் ஊரடங்கு திரும்பப்பெறப்பெற்று, சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்பட்டால், இந்த பூத்துக்குழுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசிக்க வாய்ப்புள்ளது.
17/ 29
கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா
18/ 29
கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா
19/ 29
கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா
20/ 29
கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா
21/ 29
கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா
22/ 29
கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா
23/ 29
கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா
24/ 29
கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா
25/ 29
கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா
26/ 29
கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா
27/ 29
கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா
28/ 29
கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா
29/ 29
கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா
129