முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » கொரோனா பாதிப்பு: வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்..! - ட்விட்டர் சி.இ.ஓ அறிவிப்பு

கொரோனா பாதிப்பு: வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்..! - ட்விட்டர் சி.இ.ஓ அறிவிப்பு

 • 112

  கொரோனா பாதிப்பு: வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்..! - ட்விட்டர் சி.இ.ஓ அறிவிப்பு

  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை பார்த்தால் போதுமானது என ட்விட்டரின் சி.இ.ஓ. ஜாக் டோர்சேவின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 212

  கொரோனா பாதிப்பு: வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்..! - ட்விட்டர் சி.இ.ஓ அறிவிப்பு

  ஏற்கனவே கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது சென்ற வாரம் உறுதியானநிலையில், கூகுள் நிறுவனம் தங்களது பணியாளர்கள் இத்தாலி, சைனா, ஈரான் போன்ற நாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு பணியாளர்களுக்கு அறிவுறுத்தியது.

  MORE
  GALLERIES

 • 312

  கொரோனா பாதிப்பு: வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்..! - ட்விட்டர் சி.இ.ஓ அறிவிப்பு

  அமேசான் நிறுவனம் ஏற்கெனவே வெளிநாட்டு பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தி வருகிறது. தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களை, ஏப்ரல் இறுதிவரை விமானப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்தி உள்ளது.

  MORE
  GALLERIES

 • 412

  கொரோனா பாதிப்பு: வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்..! - ட்விட்டர் சி.இ.ஓ அறிவிப்பு

  கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் ஈரான் உள்ளது. வைரசால் பாதிக்கப்பட்ட அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது மிர்முஹம்மதி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 512

  கொரோனா பாதிப்பு: வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்..! - ட்விட்டர் சி.இ.ஓ அறிவிப்பு

  ஈரானின் துணை அதிபர் மற்றும் சுகாதாரத்துறை துணை அமைச்சரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதை ஈரான் அரசு உறுதி செய்துள்ளது. இதுவரை ஈரானில் 1501 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 612

  கொரோனா பாதிப்பு: வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்..! - ட்விட்டர் சி.இ.ஓ அறிவிப்பு

  ஐரோப்பாவில் அதிக பாதிப்பிற்குள்ளான இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,835 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிப்பால் 52 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 712

  கொரோனா பாதிப்பு: வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்..! - ட்விட்டர் சி.இ.ஓ அறிவிப்பு

  இதற்கிடையில், கொரோனா பாதிப்பின் அறிகுறி தென்பட்டதால், போப் பிரான்சிஸுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 812

  கொரோனா பாதிப்பு: வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்..! - ட்விட்டர் சி.இ.ஓ அறிவிப்பு

  தென் கொரியாவில், கொரோனா வைரஸுக்கு எதிராக, போர் அறிவிப்பை அந்நாட்டு அதிபர் வெளியிட்டுள்ளார். தென் கொரியாவில் இதுவரை 4812 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பாதிப்பால் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 912

  கொரோனா பாதிப்பு: வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்..! - ட்விட்டர் சி.இ.ஓ அறிவிப்பு

  போதுமான முக கவசங்கள் கிடைக்காததால் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ள அதிபர் மூன்ஜே, அனைவருக்கும் முகக்கவசம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 1012

  கொரோனா பாதிப்பு: வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்..! - ட்விட்டர் சி.இ.ஓ அறிவிப்பு

  அமெரிக்கா முழுவதும் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் வாஷிங்டனைச் சேர்ந்தவர்கள்.

  MORE
  GALLERIES

 • 1112

  கொரோனா பாதிப்பு: வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்..! - ட்விட்டர் சி.இ.ஓ அறிவிப்பு

  பிலிப்பைன்ஸ் செக் குடியரசு நாடுகளில் முதல் கொரோனா பாதிப்பு நேற்று கண்டறியப்பட்ட நிலையில், சவுதி அரேபியா, ஜோர்டான், துனிசியா ஆகிய நாடுகளும் கொரோனா பாதிப்பை உறுதி செய்துள்ளன.

  MORE
  GALLERIES

 • 1212

  கொரோனா பாதிப்பு: வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்..! - ட்விட்டர் சி.இ.ஓ அறிவிப்பு

  சீனாவில் புதிதாக  125 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடங்கியது முதல் புதிதாக பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இந்த அளவிற்கு குறைந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

  MORE
  GALLERIES