இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 97,894 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,18,00-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1 132 பேர் தொற்றால் உயிரிழந்ததால், இறந்தவர்களின் எண்ணிக்கை 83, 198 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுக்க இதுவரை 40, 25,000 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.