இது குறித்து முகநூலில் பதிவிட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அண்டை மாநில எல்லைகளில் உள்ள மதுக்கடைகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் குவிகிறார்கள் என மக்கள் மீது அரசு பழிபோடுவதாகவும், ஊரடங்கினால் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பை சரிசெய்யும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொண்டிருப்பது நியாயமானதல்ல என்றும் கூறியுள்ளார். டாஸ்மாக் திறப்பால் நோய் தொற்று அதிகரிக்கவே செய்யும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.