தமிழகத்தில் கடந்த 7 நாட்களுக்குப் பின்னர் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இன்று 5,864 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5,295 பேர் இன்று டிஸ்சார்ஜ் ஆன நிலையில், இதுவரை மொத்தமாக 1,78,178 பேர் குணமடைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு 97 பேர் இன்று உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை மொத்தமாக 3,838 பேர் கொரோனாவால் தமிழகத்தில் மரணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கடைசியாக கடந்த 22-ம் தேதி 5849 பேர் பாதிக்கப்பட்டதே குறைந்த பாதிப்பாக இதுவரை இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழகத்தில் மொத்தமாக 57,962 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,39,978 ஆக உயர்ந்துள்ளது.