கடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் இன்று புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இன்று 3,680 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது இன்று மட்டும் 64 பேர் உயிரிழக்க மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,829 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 35,921 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 14,64,281 பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். இன்று 4,163 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், இதுவரை 82,324 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 46,105 பேர் தற்போது வரை சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் இரண்டாவது முறையாக ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கையை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை இன்று அதிகமாக பதிவாகியுள்ளது