முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » சென்னை தவிர்த்து இந்த 3 மாவட்டங்களில் கணிசமாக உயர்ந்த கொரோனா பாதிப்பு

சென்னை தவிர்த்து இந்த 3 மாவட்டங்களில் கணிசமாக உயர்ந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கோவை, சேலம், கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

  • News18
  • 16

    சென்னை தவிர்த்து இந்த 3 மாவட்டங்களில் கணிசமாக உயர்ந்த கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் நாளொன்றிக்கு சராசரியாக 6,000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சென்னை மற்றும் சென்னையை ஒட்டிய மாவட்டங்களில் மட்டுமே அதிக அளவில் தொற்று கண்டறியப்பட்டு வந்த நிலையில், ஜுலை மாதம் முதல் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    சென்னை தவிர்த்து இந்த 3 மாவட்டங்களில் கணிசமாக உயர்ந்த கொரோனா பாதிப்பு

    குறிப்பாக, ஆகஸ்ட் மாதத்தில் கோவை, கடலூர், சேலம் மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையில், இந்த மூன்று மாவட்டங்களின் பங்கு மட்டும் 16 சதவிகிதமாகும்.

    MORE
    GALLERIES

  • 36

    சென்னை தவிர்த்து இந்த 3 மாவட்டங்களில் கணிசமாக உயர்ந்த கொரோனா பாதிப்பு

    கோவையில் ஆகஸ்ட் 10ம் தேதி  1,561 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 24ம் தேதி 3143 ஆக அதிகரித்துள்ளது. இரண்டே வாரத்தில் கோவையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    சென்னை தவிர்த்து இந்த 3 மாவட்டங்களில் கணிசமாக உயர்ந்த கொரோனா பாதிப்பு

    கடலூரில் ஆகஸ்ட் 1-ம் தேதி 1195 ஆக இருந்த சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை, தற்போது 3,228 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல் சேலத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 1123 ஆக இருந்தநிலையில், தற்போது 2,536 ஆக அதிகரித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 56

    சென்னை தவிர்த்து இந்த 3 மாவட்டங்களில் கணிசமாக உயர்ந்த கொரோனா பாதிப்பு

    சென்னையில் ஜுன் மாத தொடங்கத்தில் உச்சத்தில் இருந்த இருந்த கொரோனா தாக்கம், ஜுலை மாதம் முதல் குறையத்தொடங்கியது. இந்நிலையில், தற்போது மீண்டும் சென்னையில் தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    MORE
    GALLERIES

  • 66

    சென்னை தவிர்த்து இந்த 3 மாவட்டங்களில் கணிசமாக உயர்ந்த கொரோனா பாதிப்பு

    திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் வேகமும், சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையும் ஜுலை மாதத்துடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதத்தில் சற்று குறைந்துள்ளது.

    MORE
    GALLERIES