தமிழகத்தில் இன்று 4,496 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்ந்துள்ளது இன்று 68 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 2,167 ஆக அதிகரித்துள்ளது தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 5,000 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 1,02,310 ஆக உயர்ந்துள்ளது தமிழகத்தில் நான்காவது முறையாக ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கையை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.