முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » ’தமிழகத்தில் தொடர்ந்து 15-வது நாளாக....’ கவலை அளிக்கும் புள்ளிவிபரம்

’தமிழகத்தில் தொடர்ந்து 15-வது நாளாக....’ கவலை அளிக்கும் புள்ளிவிபரம்

Corona | தமிழகத்தில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 81 ஆயிரத்து 939-ஆக உயர்ந்துள்ளது.

  • News18
  • 17

    ’தமிழகத்தில் தொடர்ந்து 15-வது நாளாக....’ கவலை அளிக்கும் புள்ளிவிபரம்

    தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து 38 ஆயிரத்தை கடந்துள்ளது. தொடர்ந்து 15-வது நாளாக உயிரிழப்பு 100-ஐ கடந்துள்ள நிலையில், ஒரே நாளில் 125 பேர் உயிரிழந்தனர்.

    MORE
    GALLERIES

  • 27

    ’தமிழகத்தில் தொடர்ந்து 15-வது நாளாக....’ கவலை அளிக்கும் புள்ளிவிபரம்

    சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 5950 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒட்டுமொத்த பாதிப்பு 3,38,055-ஆக அதிகரித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 37

    ’தமிழகத்தில் தொடர்ந்து 15-வது நாளாக....’ கவலை அளிக்கும் புள்ளிவிபரம்

    சென்னையில் ஒரு வாரத்துக்குப் பின் தொடர்ந்து மூன்றாவது நாளாக பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் புதிதாக 1196 பேர் உள்பட இதுவரை ஒரு லட்சத்து 16,650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 47

    ’தமிழகத்தில் தொடர்ந்து 15-வது நாளாக....’ கவலை அளிக்கும் புள்ளிவிபரம்

    சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டங்களில் ஒரே நாளில் புதிதாக 4 ஆயிரத்து 754 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 22 பேர் உட்பட 30 மாவட்டங்களில் சேர்த்து ஒரே நாளில் 125 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 5766-ஆக அதிகரித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 57

    ’தமிழகத்தில் தொடர்ந்து 15-வது நாளாக....’ கவலை அளிக்கும் புள்ளிவிபரம்

    மக்கள் நடமாட்டம் அதிகரிப்பதால் தான், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பதாக எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார். இதனால், தற்போதைக்கு தொற்று பரவலை முற்றிலும் ஒழிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 67

    ’தமிழகத்தில் தொடர்ந்து 15-வது நாளாக....’ கவலை அளிக்கும் புள்ளிவிபரம்

    தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 6019 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம், குணமடைந்தோர் விகிதம் 82 சதவீதத்தை கடந்து, மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 78 ஆயிரத்தை கடந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 77

    ’தமிழகத்தில் தொடர்ந்து 15-வது நாளாக....’ கவலை அளிக்கும் புள்ளிவிபரம்

    தமிழகத்தில் ஒரே நாளில் 68,444 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35,81,939-ஆக உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES