கோவையில் கடந்த 10 நாட்களில் மட்டும் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. 9 நாட்களில் மட்டும் சென்னைக்கு அடுத்து கோவையில் அதிக உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையில் சென்னை, செங்கல்பட்டுக்கு அடுத்தபடியாக உள்ள மதுரையில், 9 நாட்களில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இறப்பு விகிதம் அதிகரிக்கும் நிலையில், தீவிர நோய்கள் உள்ளோர் கொரோனா அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், தனியார் மருத்துவமனைகளை நாடும் தொற்றாளர்கள், ஆபத்தான கட்டத்தை எட்டும்போது அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது.