நவல்பட்டு காவலர் பயிற்சி பள்ளியில் பெண் காவலர்கள் 4 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதே போன்று ராணிப்பேட்டையில் இன்று ஒரே நாளில் புதிதாக 167 பேருக்கும், கன்னியாகுமரியில் ஒரு வனத்துறை அதிகாரி உள்பட 159 பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 56 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.