சாலை, சந்தைகள் போன்ற திறந்தவெளிகளில் கிருமிநாசினிகளை தெளிப்பது பயனற்றது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள அந்த நிறுவனம், திறந்தவெளிகளில் கிருமிநாசினிகள் தெளிப்பதால் கொரோனா கிருமி அழியாது. மாறாக மனிதர்களுக்கு பல்வேறு உடல்நலக்குறைவை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது. குளோரின் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் வீதிகளில் தெளிப்பதால், கண் எரிச்சல், குடல் சார்ந்த பிரச்னைகளை உண்டாக்கும். சரும எரிச்சல் உண்டாகும் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.