முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » கொரோனாவில் இருந்து மீண்ட பின் கட்டாயம் இந்த 7 டெஸ்டை எடுத்துவிடுங்கள்..!

கொரோனாவில் இருந்து மீண்ட பின் கட்டாயம் இந்த 7 டெஸ்டை எடுத்துவிடுங்கள்..!

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் இதயம், கல்லீரம், நுரையீரல், சிறுநீரக பாதிப்புகளை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.

  • 19

    கொரோனாவில் இருந்து மீண்ட பின் கட்டாயம் இந்த 7 டெஸ்டை எடுத்துவிடுங்கள்..!

    இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டு மீள்வோரின் எண்ணிக்கை 90 விழுக்காட்டுக்கு மேல் இருந்தாலும், கோவிட் டெஸ்ட் நெகடிவ் என வந்து மீண்டும் பாஸிடிவாகக்கூடிய நிகழ்வும் நடந்து வருகிறது. பெரும்பாலானோர் கோவிட் வைரஸில் இருந்து மீண்டு வந்தபிறகு பின்விளைவுகளால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, இதயம், கல்லீரம், நுரையீரல், சிறுநீரக பாதிப்புகளை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 29

    கொரோனாவில் இருந்து மீண்ட பின் கட்டாயம் இந்த 7 டெஸ்டை எடுத்துவிடுங்கள்..!

    சாதாரண தொற்று இருப்பவர்கள் 2 வாரங்களிலும், மோசமான பாதிப்பை எதிர்கொள்பவர்கள் ஒரு மாதத்திலும் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுவர முடியும். அதன்பின்னர், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டு உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ள மருத்துவர்கள், மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பிய பிறகு சில நாட்களும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் உறுப்பு பாதிப்பு குறித்து 7 வகையான பரிசோதனைகளையும் கோவிட் வைரஸில் இருந்து மீண்டவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 39

    கொரோனாவில் இருந்து மீண்ட பின் கட்டாயம் இந்த 7 டெஸ்டை எடுத்துவிடுங்கள்..!

    1. igG ஆன்டிபாடி பரிசோதனை : ஒருவருக்குள் கொரோனா வைரஸ் நுழைந்தால், அதற்கு எதிரான ஆன்டிபாடிகளை நோய் எதிர்ப்பு மண்டலம் உருவாக்கும். அந்த ஆன்டிபாடிகளின் அளவை igG பரிசோதனை மூலம் கண்டறியலாம். இந்த டெஸ்ட் பாசிட்டிவாக இருந்தால் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு 14 நாட்கள் கடந்துவிட்டது என அறிந்து கொள்ளலாம். இந்த ஆன்டிபாடிகள் ஒரு வருடம் வரை ரத்தத்தில் இருக்கும். igG ஆன்டிபாடிகள் ரத்தத்தில் இருக்கும் அளவைப் பொறுத்து ஏற்கனவே இருந்த வைரஸ் மீண்டும் பாதிக்காது. இந்த அளவை தெரிந்து கொள்வதற்காக igG ஆன்டிபாடி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் இந்த அளவை தெரிந்து கொள்வது அவசியம். igG டெஸ்ட் பாசிட்டிவாக வந்தால், நீங்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம்.

    MORE
    GALLERIES

  • 49

    கொரோனாவில் இருந்து மீண்ட பின் கட்டாயம் இந்த 7 டெஸ்டை எடுத்துவிடுங்கள்..!

    2. சி.பி.சி (CBC) ரத்த பரிசோதனை : சி.பி.சி ரத்த பரிசோதனை மூலம் ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணு, சிவப்பணு, தட்டணுக்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் நிலையை அறிந்து கொள்ளலாம். இதன்மூலம் கொரோனாவுக்கு எதிராக நீங்கள் எவ்வளவு தூரம் போராடியிருக்கிறீர்கள் என்பதையும், கொரோனாவில் இருந்து மீண்டபிறகு நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம். மேலும், உடலில் நோய்த்தொற்று, ஊட்டச் சத்துக்குறைவு, புற்றுநோய், ரத்தக்கசிவு மற்றும் ரத்த உறைவு நிலைமை, ஒவ்வாமை, தடுப்பாற்றல் நிலைமை, மருந்துகளின் பக்கவிளைவு ஆகியவற்றை அறிந்துகொள்ள முடியும்.

    MORE
    GALLERIES

  • 59

    கொரோனாவில் இருந்து மீண்ட பின் கட்டாயம் இந்த 7 டெஸ்டை எடுத்துவிடுங்கள்..!

    3. குளுக்கோஸ் மற்றும் கொழுப்பு பரிசோதனை : கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு குளுக்கோஸ் மற்றும் கொழுப்பு அளவுகளிலும் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்துகின்றன. இருதய பிரச்சனைகள், டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும்போது, அவர்களுக்கு இந்த பரிசோதனை அவசியமாகிறது, வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டபிறகும் இந்த பரிசோதனைகளை குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மீண்டும் எடுத்து, கவனமாக இருப்பது நல்லது.

    MORE
    GALLERIES

  • 69

    கொரோனாவில் இருந்து மீண்ட பின் கட்டாயம் இந்த 7 டெஸ்டை எடுத்துவிடுங்கள்..!

    4. நரம்பியல் பரிசோதனை : கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு ஒரு சில மாதங்களுக்குள் பக்கவிளைவுகளை சந்தித்து வருகின்றன. தலைச்சுற்றல், மயக்கம், நடுக்கம், சோர்வு போன்ற திடீர் உடல் நலப் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதனால், நரம்பியல் பரிசோதனைகளை மேற்கொண்டு, அதில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 79

    கொரோனாவில் இருந்து மீண்ட பின் கட்டாயம் இந்த 7 டெஸ்டை எடுத்துவிடுங்கள்..!

    5. வைட்டமின் டி டெஸ்ட் : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் டி, திசுக்களின் வளர்ச்சி, இதய ஆரோக்கியம் மற்றும் உடலுக்கு தேவையான கால்சியத்தை தக்க வைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. வைட்டமின் டி -யானது 30 முதல் 70 நானோ கிராம் வரை ஒருவருக்கு இருக்க வேண்டும். இந்த அளவில் குறைபாடு இருந்தால், வைட்டமின் டி பரிசோதனையை மேற்கொண்டு அந்த அளவை அதிகரிக்க கவனம் செலுத்த வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 89

    கொரோனாவில் இருந்து மீண்ட பின் கட்டாயம் இந்த 7 டெஸ்டை எடுத்துவிடுங்கள்..!

    6. மார்பு ஸ்கேன் : கொரோனா வைரஸில் இருந்த மீண்ட பலருக்கும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. மூச்சு விடுவதில் சிரமம் அல்லது மார்பு பகுதியில் வலி ஏதேனும் இருந்தால்
    HRCT ஸ்கேன் செய்து கொள்ளலாம். இதன்மூலம் துல்லியமாக நுரையீரல் பகுதியில் இருக்கும் பிரச்சனைகளை கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். மேலும், கொரோனா பாதிப்பால் நுரையீரலில் ஏற்பட்டுள்ள பாதிப்பையும் அறிந்து கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 99

    கொரோனாவில் இருந்து மீண்ட பின் கட்டாயம் இந்த 7 டெஸ்டை எடுத்துவிடுங்கள்..!

    7. ஹார்ட் இமேஜிங் மற்றும் இருதய பரிசோதனை : COVID-19 நோய்த்தொற்று உடலில் பரவலான அழற்சியைத் தூண்டுகிறது. இதனால் இதய தசைகள், அரித்மியாக்கள் சேதமடைகின்றன மற்றும் மயோர்கார்டிடிஸ் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சரியான இமேஜிங் ஸ்கேன் மற்றும் இதய செயல்பாடு சோதனைகளைப் மேற்கொள்வதன்மூலம் பாதிப்பை அறிந்து கொள்ளலாம். மிதமான மற்றும் கடுமையான கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் இந்த பரிசோதனையை செய்து கொள்வது அவசியம்.

    MORE
    GALLERIES