முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன...? மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன...? மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

ஊரடங்கு தளர்வுகளால் ஏற்பட்டுள்ள சாதக பாதகங்கள் குறித்து இன்று ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

 • News18
 • 13

  அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன...? மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

  கொரோனா பரவலை கட்டுப்படுத்த அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இன்றும் நாளையும் மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

  MORE
  GALLERIES

 • 23

  அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன...? மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

  கொரோனா பரவலுக்கு பிறகு அவர் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொள்வது இது 6-ஆவது முறையாகும். இந்நிலையில் முதல் நாளான இன்று பஞ்சாப், கேரளா, கோவா, உத்தரகண்ட் மற்றும் வடகிழக்கு மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் ஆகியோருடன் பிற்பகலில் ஆலோசனை நடத்துகிறார்.

  MORE
  GALLERIES

 • 33

  அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன...? மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

  2-ஆவது நாளான நாளை கொரோனா பரவல் அதிகமாக உள்ள மராட்டியம், தமிழகம், மேற்கு வங்கம், டெல்லி, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட 15 மாநில முதல்வர்கள் மற்றும் காஷ்மீர் துணைநிலை ஆளுநர் ஆகியோருடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

  MORE
  GALLERIES