Photos | தீவிர நோய் தடுப்பு நடவடிக்கை: முழு ஊரடங்கால் வெறிச்சோடிய காஞ்சிபுரம்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு இன்று முதல் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. படங்கள்: செய்தியாளர் - சந்திரசேகர்


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.


அதன்படி இன்று முதல் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குன்றத்தூர், மாங்காடு, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 18 கிராம பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.


நகர் முழுவதும் முக கவசம் அணியாமல் வாகனங்களிலும், நடந்து செல்லும் பொதுமக்களிடம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில் காஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு விதிகள் பின்பற்றப் படுகிறதா என மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், சார் ஆட்சியர் சரவணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ள மொத்த வியாபார மளிகை கடைகளில் பொதுமக்கள் சென்று வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு, அங்கு சிறு வியாபாரிகள் மட்டுமே பொருட்களை வாங்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்