கொரோனா டெஸ்ட்   தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைவரையும் வீட்டிலேயே இருக்கும் படி அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கூட்டம் கூடுவதை தவிர்க்க புதிய யுக்தியை சுகாதார அதிகாரிகள் கையாண்டுள்ளனர்.   தினசரி சந்தைக்கு வருபவர்களுக்கு திடீரென கொரோனா பரிசோதனை செய்ய தொடங்கி உள்ளனர்.   இதனால் சந்தையில் சுற்றி திரிந்தவர்கள் கம்பி வேலியை தாண்டி ஓடியுள்ளனர்.சிலர் தங்களது வாகனங்களை கூட விட்டு விட்டு தப்பியோடினர்.