

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதன் முதலாக ஒப்புதல் கிடைத்த பைசர் தடுப்பூசி பல்வேறு நாடுகளிலும் போடப்பட்டு வருகிறது. போர்ச்சுகல் நாட்டில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி கடந்த மாதம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. முன்கள ஊழியர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.


போர்ச்சுக்கல் நாட்டில் பைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியர் ஒருவர் இரண்டு நாட்களுக்கு பிறகு உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


அமெரிக்க நிறுவனமான பைசர் - பயோ என் டெக் தயாரித்த தடுப்பூசி பாதுகாப்பானது எனக் கூறி உலக சுகாதார மையமே அவசர கால ஒப்புதல் வழங்கி உள்ளது


.<br /> அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பைசர் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், போர்ச்சுகலில் அந்த தடுப்பூசியை போட்டுக் கொண்ட சோனியா ஆக்வெடோ என்ற செவிலியர் உயிரிழந்துள்ளார்.